திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைச்சர் உருவ பொம்மையை மாநகராட்சி மேயர் தலைமையில் எரிப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைச்சர் உருவ பொம்மையை மாநகராட்சி மேயர் தலைமையில் எரிப்பு

மக்களவையில் இன்று பி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள்.

மொழி பிரச்சனைகளை தூண்டுவது மட்டுமே அவர்களின் வேலை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள்” என பேசியிருந்தார். இதற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு, அவரது உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உருவ பொம்மை குச்சியால் அடித்தும் எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டார்.மத்திய அமைச்சருக்கு எதிராக திமுகவினர் கோஷங்களை எழுப்பி நூற்றுக்கணக்கான போராட்டத்தில் கலந்து கொண்டனர்

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision