மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரம்

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரம்

40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு உரிய ஒரு முக்கியமான கண்பார்வை இழப்பு ஏற்படுத்தும் நோய். இதற்கு முக்கிய ஆபத்து காரணி அதிக கண்ணீர் அழுத்தம் மட்டுமே ஆகும்.இந்த அதிக கண்ணீர் அழுத்தம் விழித்திரை நரம்பை பாதித்து கண்பார்வை இழக்க செய்கிறது. தேசிய திட்டத்தினால் வழங்கப்பட்ட புள்ளி விவரங்கள் படி 12.8% மக்கள் கண்ணீர் அழுத்த நோயால் பார்வை இழக்கின்றனர்.

இந்த நோயை விரைவில் கண்டறிய அதிநவீன கருவிகளை பயன்படுத்தி சொட்டு மருந்து மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக கண்ணீர் அழுத்த நோயின் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். அனைத்து அதிநவீன கருவிகளும் மற்றும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் இலவசமாக நமது கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை கண் துறையில் அளிக்கப்படுகிறது.

 கண் அழுத்தம் நோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை!:

1)இந்த நோயால் ஒரு முறை பார்வை இழந்து விட்டால் திரும்ப பெற இயலாது. அதனால் இந்த நோயை விரைவில் கண்டறிந்து சிகிச்சை செய்வதற்கான முக்கியத்துவத்தை நாம் அறிய வேண்டும்.

2) 50 வயதிற்கு மேலானவர்கள் அதிகம் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்.

3) காட்சி புலத்தில்(Visual filed)கரும்புள்ளிகள் தெரிந்தால் கண்ணீர் அழுத்த நோயை குறிக்கும்.

4) பார்வை இழப்பு மெதுவாக அதிகரித்து முழு பார்வ இழப்பை ஏற்படுத்தும்.

5) இந்த நோய் உள்ளவர்களின் குடும்பத்தினரை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.

6) ஒளி விளக்கை பார்க்கும் பொழுது அதை சுற்றி வண்ண ஒளிவட்டம் தெரிந்தால் இந்த நோய் இருக்க வாய்ப்பு இருக்கிறது

7)ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக கிட்ட பார்வை உள்ளவர்கள் கண்ணீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது

8) காட்சி புல குறைபாடுகள்(visual field)விரைவில் கண்டறிய Automated perimeters என்னும் கருவியை பயன்படுத்தலாம் சொட்டு மருந்துகள் மற்றும் Trabeculectomy என்னும் அறுவை சிகிச்சை கண்நீர் அழுத்த நோயின் பாதிப்பை நிறுத்துகிறது.

9) இவை அனைத்தும் இலவசமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது

10) இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய அறிவுரை படுத்தப்படுகிறார்கள்

புள்ளி விவரங்கள்:

வருடம் 2021 மார்ச் 2024 மார்ச் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையின் கண் பிரிவில் கண்நீர் அழுத்தத்தை பரிசோதிக்க பல உயர்தர கருவிகள் உள்ளன இவற்றுள் ரூபாய் 4 லட்சம் விலை மதிப்புள்ள Non contact Tonometer எனும் கருவி கண்ணீர் அழுத்தத்தை பரிசோதிக்க பயன்படுத்தப்படும். இதனை பயன்படுத்தி சுமார் 4382 மக்கள் கண்ணீர் அழுத்து நோய்க்கு பரிசோதனை செய்யப்பட்டார்கள் அது 150 பேர் கண்ணீர் அழுத்த நோய் உள்ளவர்களாக கண்டறியப்பட்டனர்.

மேலும் 1, 64,65,750 விலை மதிப்புள்ள optical coherence tomography spectrails and Topcon  என்னும் கருவிகள் கண் நரம்பை பாதிப்பு பற்றி அறிவதற்கு மிகவும் முக்கியமான கருவிகள் ஆகும். இவை இரண்டும் கண் பிரிவில்  உள்ளன. இதன் மூலம் 1680 பேர் கண் பரிசோதனை செய்யப்பட்டனர் 98 பேர் நோய் உள்ளவர்களாக கண்டறியப்பட்டனர்.

கடந்த நான்கு வருடங்களாக 150 பேர் கண்ணீர் அழுத்த நோய் அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமீபத்திய கருவிகள் மற்றும் முறைகள் மூலம் அறுவை சிகிச்சை வழங்கப்படுகின்றன.மேலும் மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 பேர் Peripheral Iridotomy என்னும் கண்ணீர் அழுத்தத்தை குறைக்கும் அறுவை சிகிச்சை வழங்கப்படுகின்றன. கண்ணீர் அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் பின்தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மேலும் விவரத்திற்கு கீழ் உள்ள முகவரியை அணுகவும் கண் பிரிவு :

கி.ஆ.பெ. வி அரசு மருத்துவக் கல்லூரிமற்றும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை,புத்தூர், திருச்சிராப்பள்ளி- 620017