பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் விபரீதம் கீழே குதித்த மாணவன் படுகாயம்

மணப்பாறை அருகே அரசுப்பேருந்தில் இருந்து கீழே குதித்த பள்ளி மாணவன் படுகாயம்பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் விபரீதம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே உள்ள சீகம்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (12). இவர் நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி முடிந்தபின் வீடு திரும்புவதற்காக திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடுப்பட்டியில் ஏறியுள்ளார்.
பேருந்து மாணவன் இறங்க வேண்டிய கல்பட்டிசத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற நிலையில் கல்பட்டி ஆற்றுப்பாலத்தில் சென்ற போது முதியவர் ஒருவர் குறுக்கே வந்ததால் பேருந்து மெதுவாக இயக்கப்பட்டதால் மாணவன் பேருந்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் கீழ விழுந்த மாணவன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் பேருந்தில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision