திருச்சியில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்த ஒருவர் அதிரடி கைது:

திருச்சியில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்த ஒருவர் அதிரடி கைது:

திருச்சியில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை பகிர்வதற்கு அடிமையானதால் நேர்ந்த விபரீதம்…..எவ்வாறு காவல்துறையினரிடம் சிக்கினார்? பின்னணி என்ன?

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவில் பணிபுரியும் காவலர் முத்துப்பாண்டி என்பவர் கடந்த 11ஆம் தேதி பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் கண்காணித்துக் கொண்டிருந்த பொழுது, நிலவன் நிலவன் என்ற பெயரில் உள்ள முகநூல் கணக்கில் குழந்தைகள் தொடர்பான பல்வேறு ஆபாச படங்களை பதிவிடப்பட்டிருந்ததை பார்த்த முத்துப்பாண்டி திருச்சி மாநகர் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரைத் தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறை, சம்பந்தப்பட்ட முகநூல் பக்கத்தை தீவிரமாக கண்காணித்த பொழுது அதில் பல்வேறு குழந்தையை ஆபாச படங்களையும் பதிவேற்றி இருப்பது தெரியவந்தது மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த கைபேசி முகவரி ஆய்வு செய்த பொழுது அது கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிறிஸ்டோபர் திருச்சி காஜாபேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர், ITI AC மெக்கானிக் படித்துள்ள கிறிஸ்டோபர், நாகர் கோவிலில் ஹவுஸ்கீப்பிப் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். தனக்கு திருமண மாகி குழந்தை இல்லாததால் கடந்த வேலையை விட்டுவிட்டு திருச்சி வந்துள்ளதாக தெரிவித்துள்ள கிறிஸ்டோபர், குழந்தைகள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தனது கைபேசியிலுள்ள தொடர்பு எண்களுக்கு பகிர்ந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், இதற்கு முன்னர் ஆதவன் ஆதவன் என்ற ஒரு முகநூல் பக்கத்தைத் தொடங்கி அதிலும் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவு விட்டதாகவும் அந்த முகநூல் பக்கம் வலைதள சேவை நிறுவனத்தால் முடங்கி விட்டதால், அதன் பிறகு நிலவன் நிலவன் என்கிற புதிய முகநூல் பக்கத்தை தொடங்கி நான்கு வருடங்களாக செய்து வருவதாகவும் அதற்கு தான் அடிமையாகி விட்டேன் என்றும் விசாரணையில் தெரிவித்துள்ள கிறிஸ்டோபர், காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து முகநூல் பக்கத்தில் உள்ள ஆபாசப் படங்கள் மற்றும் அது குறித்த அனைத்து தகவல்களையும் தான் நீக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரது கைபேசியை பறிமுதல் செய்த காவல்துறை அதில் உள்ள குழந்தைகள் ஆபாச பட சம்பந்தமான தகவல்களை பெற தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில்,குழந்தைகள் ஆபாசபங்களை சமூக வலைதளங்களில் வைத்திருப்பதும், பதிவிடுவதும், பகிர்வதும் IT ACT 67 A(B)b இன் படி குற்றமாகும். இதன்படி கிறிஸ்டோபருக்கு 10 லட்சம் அபராதமும், போஸ்கோ சட்டத்துன் கீழ் 7 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.