உயிரைக் காத்த ஊடகவியலாளர்: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

உயிரைக் காத்த ஊடகவியலாளர்: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. திடீரென இரண்டு பெண்கள் தங்கள் மேல் மண்ணெண்ணையை ஊற்றி பற்றவைக்க சென்ற நிலையில் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க சிலர் ஒளிப்பதிவு எடுக்க இருந்த நிலையில் புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் க.கணேஷ் என்பவர் மட்டும் ஓடிச்சென்று
கண்ணிமைக்கா நேரத்தில் அத்தீப்பட்டி தட்டி சென்றார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. திடீரென இரண்டு பெண்கள் தங்கள் மேல் மண்ணெண்ணையை ஊற்றி பற்றவைக்க சென்ற நிலையில் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க சிலர் ஒளிப்பதிவு எடுக்க இருந்த நிலையில் புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் க.கணேஷ் என்பவர் மட்டும் ஓடிச்சென்று கண்ணிமைக்கா நேரத்தில் அத்தீப்பட்டி தட்டி சென்றார்.அதன் காணொளி காட்சியும் வெளியாகியுள்ளது.

எதற்காக தற்கொலை முயற்சி?

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி. கணவன் இறந்த நிலையில் தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் அனுஜெயஸ்ரீயும் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் அப்பகுதியை சேர்ந்த இன்னாசிமுத்து என்பவர் தொடர்ந்து அவர்களுக்கு தொந்தரவு தந்துள்ளார். வீட்டிற்கு செல்லும் பாதையை அடைத்து வைத்துள்ளதாகவும், அவ்வப்போது கூரையை பிரித்து விடுவதாகவும், தங்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தை துண்டிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக பலமுறை திருவெரும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதுக்குறித்து 3 வருடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

கணேஷை தொடர்பு கொண்டு பேசியபோது”இதுபோல்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. யாராக இருந்தாலும் முதலில் ஒருவரின் உயிரை காப்பது தான் சிறந்ததாக அமையும்.இதனை ஒளிப்பதிவாக செய்து பார்ப்பதைவிட எனக்கு அவர்களின் உயிர் மேலாக தெரிந்தது ‌. அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க மரணம் தீர்வாக இருக்காது என எண்ணுகிறேன். விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க சிலர் ஒளிப்பதிவு எடுத்துக் கொண்டிருந்த நிலையில் தானும் அதுபோல ஒளிப்பதிவை செய்யாமல் ஒரு உயிரை மேலாக கருதி அவர்களை காப்பாற்றி க.கணேஷ் என்பவர் உண்மையிலேயே கிரேட் தான்.