இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடிய நபர் குண்டர் சட்டத்தில் கைது
ரூ.1,50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் ரூ.10000/- மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகரில் கடந்த பிப்ரவரி 19 ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை - திருச்சி பைபாஸ் ரோடு, தனியார் வாட்டர் கம்பெனி அருகிலுள்ள சுடுகாடு முன்பு, இரவு ஒருவர் தனது நண்பருடன் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 4 நபர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டி, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்னை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை செய்ததில் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்தது திருவானைக்கோவில் உள்வீதியை சேர்ந்த நகேஷ் மற்றும் 3 நபர்கள் ஒன்று சேர்ந்து, வழிப்பறி செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் நகேஷ் என்பவர் மீது ஸ்ரீரங்கம் காவல்நிலைத்தில் ஒரு வழிப்பறி வழக்கு மற்றும் ஒரு அடிதடி வழக்கு என 2 வழக்களும், கோட்டை காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்களும், கேகே நகர் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தும், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் காமினி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision