ஆன்லைன் குளறுபடிகள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திற்கு மூதாட்டி புகார்

Railways tickets online booking complaints

ஆன்லைன் குளறுபடிகள் மீது  நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திற்கு மூதாட்டி புகார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் உமா ராமசாமி (75).

இவர் வரும் ஜூலை ஐந்தாம் தேதி திருச்சியில் இருந்து பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று அருகில் உள்ள ஆன்லைன் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது ஆன்லைனில் அவரது பயணத்திற்காக ரயில்களில் விபரம் தேடிய போது வண்டி எண்: 22498, SGNR HUMSAFAR என்ற ரயிலில் 3 வகுப்பு ஏசி பெட்டியில் இருக்கைகள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து உமாராமசாமி டிக்கெட் முன்பதிவு செய்தார். அவருக்கு முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட்டு B9 பெட்டியில், 9ம் நம்பர் லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக வரி உட்பட ரூ875 அவர் செலுத்தினார். பின்னர் அவரது தொலைபேசி எண்ணில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மூலம் அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட விவரம் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்து 15 நிமிடத்தில் அவரது டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாகவும் பிடித்தும் போக மீதி 650 ரூபாய் உங்களது வங்கி கணக்கில் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் செலுத்தப்படும் எனவும் குறுந்தகவல் வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த உமா ராமசாமி ரயில்வே விசாரணை எண் 139க்கு தொடர்பு கொண்டு பேசினார்.

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி உமா ராமசாமியிடம் பேசியபோது தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டின் விவரம், டிக்கெட் கேன்சல் செய்த விபரம் ஆகியவற்றை சரி பார்ப்புக்குப் பிறகு, அவர் புக்கிங் செய்த தேதியில் அந்த ரயில் இல்லை என வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்ததாக உமா ராமசாமி கூறினார்.

பின்னர் உமா ராமசாமி தனது செல்போனில் முன்பதிவு செய்த ரயிலில் இருக்குகள் குறித்த விவரம் பார்த்தபோது அதில் இருக்கைகள் இருப்பதாக காண்பிக்கிறது. இந்நிலையில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் குறிப்பிட்ட ரயில் இல்லை என கூறுவது ஏற்புடையதாக இல்லை. மேலும் டிக்கெட் முன்பதிவு தானாக ரத்து செய்யப்பட்டதால் தமக்கு 200 ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதுடன் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக மூதாட்டி உமா ராமசாமி தெரிவித்தார்.

வயதான காலத்தில் ரயில் நிலையம் சென்று வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாத நிலையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இது போன்ற குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்று ஆன்லைனில் மோசடி நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தினை ஈடு கட்டும் வகையில் தான் செலுத்திய முழு தொகையை ரயில்வே நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision