சாலை வசதி செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பு

சாலை வசதி செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் ஊராட்சியில் உள்ள மேலத்தெருவில் சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காதை கண்டித்தும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,  வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு எடுத்த கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு இன்று காலை பதிவுத் தபால் மூலம் மனு அளித்துள்ளனர்.

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் ஊராட்சியில் உள்ள மேலத்தெருவில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலை 40 அடி அகலம் உள்ளதாகவும் தேர் செல்லும் பாதையாகவும் உள்ளது. இந்த பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த வீதியில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது் மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.

 தற்போது கோடை காலம் என்பதால் புழுதி பறக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சாலையை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்து இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு இன்று பதிவுத் தபால் மூலம் மனு அளித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision