திருச்சி மாநகராட்சியில் நகரும் சந்தை திட்டம்! 250 மதிப்புள்ள 11 காய்கறி வகைகள் 150க்கு விற்பனை:

திருச்சி மாநகராட்சியில் நகரும் சந்தை திட்டம்! 250 மதிப்புள்ள 11 காய்கறி வகைகள் 150க்கு விற்பனை:

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக ரூபாய் 250 மதிப்புள்ள 11 காய்கறிவகைளை பொதுமக்களை தேடி ரூபாய் 150 க்கு விற்பனை செய்து வருகின்றனர்.இத்திட்டத்தைத் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் இன்று தொடக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகரிலும், மாவட்டத்தின் 11 வட்டங்களிலும் தாற்காலிக காய்கனி சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது, கூட்டுறவுத் துறை மூலம் நகரும் பசுமை பண்ணை கடைகள் வாயிலாகக் குறைந்த விலையில் காய்கனிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், பொதுமக்கள் காய்கனிகளுக்கு அதிகளவில் வெளியே வருவதைத் தடுக்கவும், அவரவர் இருப்பிட பகுதிகளுக்கே சென்று குறைந்த விலையில் வழங்கும் வகையில் காய்கனிகள் தொகுப்பு பை வழங்கும் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

திருச்சி மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி, கத்தரிக்காய், தக்காளி, முருங்கை, பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய், வாழைக்காய், செளசெள காய் ஆகியவை ஒரு கிலோ முதல் அரை கிலோ வரை அந்தந்த காய்கனிகளின் விலைகளுக்குத் தகுந்தபடி எடை அளவு நிர்ணயம் செய்து மொத்தமாக வழங்கப்படுகிறது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் கோட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில், காய்கனிகள் கொண்டு செல்லும் வாகனங்களை அமைச்சர்கள் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர். மேலும், பொதுமக்களுக்கு ரூ.150 மதிப்பில் 11 வகை காய்கனிகள் அடங்கிய தொகுப்பு பைகளையும் வழங்கினர்.

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக ரூபாய் 250 மதிப்புள்ள காய்கறிவகைளை பொதுமக்களை தேடி ரூபாய் 150 க்கு விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், பொன்மலை, அரியமங்கலம், கோ. அபிஷேக புரம் என 4 கோட்டங்களிலும் தலா ஒரு வாகனம் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களுக்கு ரூ.150 விலையில் காய்கனிகள் வழங்கப்படும். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நாள் வரையிலும் இத்திட்டம் தொடரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.