திருச்சி தேசியக்கல்லூரியில் 10-வது ராஜாஜியின் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு:

திருச்சி தேசியக்கல்லூரியில் 10-வது ராஜாஜியின் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு:

திருச்சி தேசியக் கல்லூரியில் பத்தாவது ராஜாஜியின் நினைவு அறக்கட்டளை சார்பாக இன்று காலை 10 மணியளவில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராமன், பேராசிரியர் ஆர்.சீனிவாசன் மற்றும் சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் ஆர்.சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். பின்பு சிறப்பு விருந்தினர் ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் உரையில்…  “ராஜாஜியின் 13 கொள்கைகள் மற்றும் ஆளுமை பண்புகள் பற்றியும், ஒரு  நீர் விநியோகத்திற்கு ஒரு பின்தங்கிய சமூக மனிதரை நியமித்த  ராஜாஜியின் தைரியம், அவரது புத்திசாலித்தனம் மற்றும் மனதின் கூர்மை, மதுவிலக்கு, ஏமாற்றத்தைக் கையாளுதல், நட்பைப் பாராட்டுதல், காந்திஜியின் நட்பு , அவரது கடின உழைப்பு, ராஜாஜியின் அர்ப்பணிப்பு வேலை, தமிழ் மீதான அவரது அன்பு மற்றும்  எதிர்காலத்திற்கான அவரது பார்வை” என ராஜாஜியின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு சிறப்பாக சொற்பொழிவாற்றினார்.
மேலும் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கவும், அவரை பின்பற்றவும், அவரைப் போன்ற ஒரு தலைவராகவும் பின்னாட்களில் வரவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இறுதியாக தேசியக் கல்லூரியின் முதல்வர் ஆர்.சுந்தரராமன் அவர்கள் நன்றியுரை கூறினார். பேராசிரியர் மகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.