மாற்றுத்திறன் மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாநகராட்சி பள்ளி மாணாக்கர்கள் பேரணி
உலக மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் மூன்றாம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதில் மாற்று திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கீழரண்சாலையிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இப்பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் இராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்போம் என்ற முழக்கத்துடன், ஒதுக்காதீர் ஒதுக்காதே மாற்றுத்திறனாளிகளை ஒதுக்காதீர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்ற
வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி பள்ளியில் பயிலும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது பயிலும் மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர். இந்த பேரணியானது பள்ளியில் இருந்து துவங்கி இபி ரோடு, பாபு ரோடு, தேவதானம் வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO