2 ½ வருடங்களுக்கு முன் கொலை - கொலையாளியை பிடித்த எஸ்.பி தனிப்படை

2 ½ வருடங்களுக்கு முன் கொலை - கொலையாளியை பிடித்த எஸ்.பி தனிப்படை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பிரபு (37) என்பவர் கடந்த (27.11.2021)-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உப்பிலியபுரம் காவல் நிலைய குற்ற எண். 500/21, u/s 302 IPC-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2 ½ வருடங்களாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த மேற்படி வழக்கினை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மேற்படி வழக்கினை ஆய்வு செய்து தனி கவனம் செலுத்தி, ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனிப்படை அமைத்து உத்தரவு பிறப்பித்தார். துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், மேற்படி கொலை வழக்கு தொடர்பாக, தனிப்படையினருடன் ஒருங்கிணைந்து புலன் விசாரணை செய்து வந்தார்.

இதனை தொடர்ந்து தனிப்படையினர் மேற்படி கொலை வழக்கு தொடர்பாக, மேற்படி கொலையுண்டு இறந்த நபர்-க்கு சொத்து பிரச்சனை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, பெண்கள் தொடர்பான பிரச்சனை, குடிபோதையில் ஏற்பட்ட முன் விரோதம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சந்தேகங்களை அடிப்படையாக வைத்து விசாரணை செய்து வந்தனர்.

இதன் அடிப்படையில் தனிப்படையினர்க்கு கிடைத்த ரகசிய தடயத்தின் அடிப்படையில் ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மகன் ரமேஷ் (29) என்பவரை நேற்று (15.06.2024)-ஆம் தேதி கைது செய்து, விசாரணை மேற்கொண்டபோது பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மேற்படி பிரபு-வை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் இறந்த நபரின் செல்போன் ஆகியவற்றை, அதே கிராமத்தில் உள்ள தெற்கு காலணியில் உள்ள மாணிக்கம் என்பவரது கிணற்றில் எதிரி வீசியுள்ளார்.

மேலும் சம்பவத்தன்று துப்பறியும் மோப்பநாய் படைப்பரிவைச் சேர்ந்த மோப்பநாய் Spark (மோப்பநாய் கையாளுர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன், காவலர் 356 இராஜராஜசோழன்) வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்க ஆய்வு செய்த போது, மேற்படி மோப்பநாய் Spark எதிரி சம்பத்திற்கு பயன்படுத்தி வீசி சென்ற கிணற்றின் அருகே சென்று நின்றதுகுறிப்பிடதக்கது.

கடந்த 2 ½ வருடங்களாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த மேற்படி கொலை வழக்கினை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனி கவனம் செலுத்தி, தனிப்படை அமைத்து, நேற்று (15.06.2024) வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளியை தனிப்படையினர் மூலம் கைது செய்துள்ளனர். மேற்படி தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரூ.15,000/- பண வெகுமதி அறிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision