ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இன்று (18.05.2024) நடைபெற்ற என் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாபிரதீப் குமார் தலைமையேற்று விழாப்பேருரையாற்றினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.... ஒன்றிய அரசு போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை உயர்த்துவதை இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள். வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயர் கல்வி தொடர்பான ஆலோசனை முகாம்கள் நடத்தவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நல மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனைகள் (Career Guidance) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு (25.06.2022) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட ஆலோசனைகளின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 12 ஆம் வகுப்பில் நேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு என் கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance) MMT & Nurture என்ற தன்னார்வ தொண்டு இயக்கத்தின் மூலம் (2022 - 2023) கல்வியாண்டில் "விழுதுகளை வேர்களாக்க" என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூன்று கட்டங்களோடு மாணவர்களுக்கு முழுமையான உயர்கல்வி சார்ந்த நம்பிக்கை கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

(2023 - 2024) ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு "என் கல்லூரி கனவு உயர்வழிகாட்டுதலில் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்தும், அப்படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்தும் வழிகாட்டு ஆலோசனைகள் (Career Guidance) MMT & Nurture இயக்கத்தின் மூலம் இரண்டாம் கட்டமாக நடைபெறுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 13 மேல்நிலைப்பள்ளிகளில் (2023 - 2024) ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 623 மாணவர்களில் 555 பேர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். தேர்ச்சி சதவீதம் 89% மாநில அளவில் இத்துறையில் 91.2% தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 49 விடுதிகளில் (2023 - 2024) ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று மாவட்ட அளவில் 475 மாணவர்கள் தேர்வு எழுதி 437 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி சதவீதம் 92% மாநில அளவில் இத்துறையில் 91.3% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இத்துறையில் உயர்கல்வி செல்லும் மாணவர்கள் துறைசார்ந்த படிப்புகளுக்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை பெற வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றியும், எந்த பாடப்பிரிவினை தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றியும் MMT & Nurture தன்னார்வ குழுவினரால் விரிவாக வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், திட்ட ஆலோசகர், ஆதிதிராவிடர் நலத்துறை ஜி.ராஜாஜெகஜீவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்(பொ) கோ.தவச்செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் CG (MMT) டாக்டர் டி.பாலசுப்பிரமணியன், ஏ.சிவானந்தன், CG (BHEL NURTURE) திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) கீதா, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந.செந்தில்குமார் (BHEL NURTURE), மதி (MMT, NURTURE) ஆர்.மாணிக்கவாசகம், கிருஸ்து மைக்கேல் ராஜா, தங்கவேல், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision