மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான தடகள போட்டி - திருச்சி மாற்றுத்திறனாளி வீரர்கள் வழியனுப்பி வைப்பு!!

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான தடகள போட்டி - திருச்சி மாற்றுத்திறனாளி வீரர்கள் வழியனுப்பி வைப்பு!!

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது.

Advertisement

இதனை முன்னிட்டு திருச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து இன்று புறப்பட்டனர்.

Advertisement

இவர்களுக்கு சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான மணிகண்டன், ஆறுமுகம் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர்கள் மகேந்திரன் (குண்டு எறிதல்), வெங்கடேஷ் 100 மீட்டர் 200 மீட்டர் (ஒட்டபந்தயம்), முகமது ஆசிக் 100 மீட்டர் ஓட்டபந்தயம் & நீலம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள திருச்சியிலிருந்து பெங்களூர் புறப்பட்டனர்.

 இவர்களை மாற்றம் அமைப்பு, தன்னார்வ மாற்றுதிறனாளி சங்கம், தாய்நேசம் அறக்கட்டளை, தினசேவை அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.