திருச்சி ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு
திருச்சி ஜோசப் கல்லூரியில் வணிகவியல் ஆய்வகத் துறையின் சார்பில் ஐசிஎஸ்எஸ்ஆர் நிதி நல்கை உடன் தொழில்நுட்ப மாற்றத்தினால் வங்கிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கினை பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் சிறப்பு விருந்தினராக தொடங்கி வைத்தார். அவர்தம் உரையில் வங்கி சேவையை திறம்பட செயல்படுத்தும் வங்கிகள் பாராட்டப்பட வேண்டியவை எனினும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வண்ணம் இது அமைய வேண்டும் என்று கூறினார்.
கல்லூரி முதல்வர் அருட்பணி.முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சேசாதலைமை ஏற்று ஏற்று நடத்தினார். தனது தலைமை உரையில் தொழில்நுட்ப வளர்ச்சி பாராட்டுக்குரியவை என்றும் வளர்ச்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் k.அலெக்ஸ் தனது வாழ்த்துரையில் தொழில்நுட்ப வளர்ச்சி நமது சிந்தனை, சொல், செயல்களை ஆக்கிரமிப்பது ஆகவும் நல்ல வழியில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார் முன்னதாக வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் அலெக்ஸாண்டர் பிரவீன் வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் முனைவர் ஜான் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வு நான்கு அமர்வுகளாக நடைபெற்றது இந்நிகழ்வு இக்கருத்தரங்கில் 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO