பம்பரத்திற்கு நோ! - சிலிண்டரா? தீப்பெட்டியா?
நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து அந்தந்த வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடக்கூடிய தொகுதியில் வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர். மேலும் தங்கள் போட்டியிடும் தொகுதிக்கு சின்னம் பெறுவதில் ஒருசில கட்சிகளுக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர்கள் கட்சியின் சின்னமான பம்பரம் சின்னம் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வந்தது இந்த நிலையில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துறை வைகோ... செத்தாலும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஆனால் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு மனமில்லை. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் கொடுக்க முடியும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து பம்பரம் சின்னம் கிடைக்காது என்ற உறுதியாக தெரிந்து நிலையில், அவர்கள் கேட்டுள்ள தீப்பெட்டி அல்லது சிலிண்டர் சின்னத்தில் ஒன்றில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் களம் வெயில் சூட்டை விட களம் சூடு அதிகமாகி இருக்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision