என் ஸ்டேஷன் லிமிட் இல்லை - மூன்று மாதங்களுக்கு முன்பு களவு போன டூவீலருக்கு எஃப் ஐ ஆர் போட போலீசார் அலைக்கழிப்பு

என் ஸ்டேஷன் லிமிட்  இல்லை - மூன்று மாதங்களுக்கு முன்பு களவு போன டூவீலருக்கு எஃப் ஐ ஆர் போட போலீசார்  அலைக்கழிப்பு

திருச்சி கருமண்டபம் மாருதி நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிராட்டியூர் ராஜகிருஷ்னா ஆதித்யா மாருதி சுசுகி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மே மாதம் பத்தாம் தேதி இவரது வாகனத்தை தனது பணி புரியும் நிறுவனத்திற்கு முன்பு நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக விழுப்புரம் சென்றுள்ளார் .

இரவு ஏழு முப்பது மணி அளவில் திரும்பி வந்து பார்க்கும் பொழுது வாகனம் திருட்டுப் போய்விட்டது என அறிந்த உடனேயே காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். எடமலைப்பட்டி புதூர், சோமரசன்பேட்டை, அமர்வு நீதிமன்ற காவல் நிலையங்களில் புகார் அளிக்க முயற்சித்தும் அந்த இடமானது தங்கள் எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று காவல் நிலையத்தில் புகார் மனுவை ஏற்க மறுத்துள்ளனர்.

எனவே மே 15ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நேரடியாக மனு அளித்ததன்பேரில் செஷன் கோட்டில் இருந்து இது எங்கள் எல்லைக்குட்பட்டதில்லைபுகாரை எஸ்பி அலுவலகத்திற்கு மாற்றி தருகிறோம் என்று கூறினர். நேரடியாக எஸ்பிஐ சந்தித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வன் ஹெல்ப்லைன் திட்டத்தில் புகார் அளித்தவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். எனினும் எந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்று இதுவரை தெரியவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

மூன்று மாதங்களாகியும் வாகனம் திருடப்பட்டு விட்டதாக எஃப் ஐ ஆர் போடவில்லை. உடனடியாக எங்களது வாகனத்தை கண்டுபிடித்து தர கோரிக்கை வைத்துள்ளார். மூன்று மாதங்களாக மாநகர, மாவட்ட போலீசார் தங்கள் எல்லை எது என்பதை சொல்லாமல் திருடு போன வாகன உரிமையாளரிடம் மாற்றி மாற்றி அலைய வைத்துள்ளனர். இதுவரை அவர் வாகனம் நிறுத்தி காணாமல் போனது எந்த காவல்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாத நிலை உள்ளதாக தினம் புலம்பிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலை பரிதாபத்திற்குரியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision