இ-பாஸை தடை செய்ய வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிறு - வாகன ஓட்டுநர்கள் நூதன போராட்டம்!
திருச்சியில் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் சார்பாக நூற்றுக்கணக்கானோர் மத்திய பேருந்து நிலையம் அருகே ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வாகனத்திற்கான இ.எம்.ஐ கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், வட்டி வீதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் விலையை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் அவரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இவ்வளவு பேர் ஒன்று கூடி போராட்டம் நடத்த அனுமதி இல்லை. தனிமனித இடைவெளியுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளனர். கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நீதிமன்றம் வரை ஊர்வலமாக விதமாக செல்ல முற்பட்டனர்.ஊரடங்கு காலத்தில் ஊர்வலமாக செல்ல கூடாது என காவல்துறை தடுத்து நிறுத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்.
தற்போது அனைத்து ஓட்டுநர்களும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக போக்குவரத்துறை அமைச்சர் உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும் .அமைச்சர்(கரூரில்)மிக அருகில் இருப்பதால் அவர் உடனடியாக இங்கு வந்து பிரச்சினையை தீர்வு காண நடவடிக்கை எடுத்தால் உடனடியாக போராட்டம் கைவிடப்படும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை துவக்கியுள்ளனர்