ரூ4.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை விற்க காத்திருந்த கும்பல் - கையும் களவுமாக பிடித்த போதை பொருள் தடுப்பு பிரிவினர்!
இந்தியாவைப் பொறுத்தவரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் அபின், ஹெராயின், கஞ்சா கோக்கைன், பிரவுன் சுகர் போன்ற போதை தரக்கூடிய வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு கடுமையான சட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கசையடியும், மரண தண்டனையும் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக நம்முடைய திருச்சியில் கஞ்சா என்னும் போதை பொருள் பற்றியும் செய்திகளையும் அறிந்திருப்போம். தற்போது திருச்சியில் அபின் என்னும் போதைப்பொருளை கை மாற்றும் போது கையும் களவுமாக பிடிபட்ட கும்பலின் கதைதான் இது!
இந்த போதைப்பொருள் கும்பலில் ருவாண்டா அடைக்கலம், அத்தடியான், ஆறுமுகம், ஜெயபிரகாஷ், பாலசுப்பிரமணியம் ஆகியோரில் அத்தடியான் என்பவர் திருச்சி மண்ணச்சநல்லூர் மான்பிடிமங்களத்தை சேர்ந்தவன். மற்ற 4 பேரும் பெரம்பலூரை சேர்ந்தவர்கள். இதில் ஆறுமுகம் (68) என்பவருக்கு வெளியில் இருந்து போதைப்பொருள் வருவதாக தெரியவந்துள்ளது. இதனை பாலசுப்பிரமணியம் இவரின் உறவினர் ஜெயப்பிரகாஷ் , ருவாண்டா அடைக்கலம் இவரின் நண்பர் திருச்சி அத்தடியான் ஆகியோர் போதைப்பொருளை தமிழகம் முழுவதும் கைமாற்றி வந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் போதைப்பொருளான அபினை கை மாற்றுவதற்காக திருச்சி மன்னார்புரம் கண்ணப்பா ஹோட்டல் எதிரில் மதுரை கும்பலுக்காக காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் காமராஜ்க்கு ரகசிய தகவல் சென்றதையடுத்து முன்னெச்சரிக்கையாக மன்னார்புரம் பகுதியில் காத்திருக்கின்றனர். மதுரையை சேர்ந்த கும்பல் வராததால் இந்த பெரம்பலூர் சேர்ந்த நான்கு பேரையும் திருச்சியை சேர்ந்த ஒருவரையும் கையும் களவுமாக வைத்து சம்பவ இடத்திலேயே பிடித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் அபின் என்னும் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 4.5 லட்சம் என தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக இவர்கள் 5 பேரை கைது செய்தும், இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த போதைப்பொருள் கும்பலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சங்கிலி தொடர் கும்பல் விரைவில் சிக்குவார்கள் என தெரிவித்தனர்.