திருச்சியில் தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அறிவிப்பு
திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற 11ஆம் தேதி (திங்கள் கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சிராப்பள்ளி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.
இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி(அப்ரண்டிஸ்) பெறாதவர்களை மற்றும் (2017-18), (2018-19), (2019-20), (2020-21) ஆகிய
வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ பயிற்சியாளர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண்,பெண் இருபாலரும்) அனைவரும் கலந்துகொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7000/-முதல் ரூ.10,000/-வரை நிறுவனத்தாரால்
வழங்கப்படும்.
தொழிற்பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளளப்படுகிறார்கள்.
மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது
0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO