நவக்கிரங்கள் மனைவிகளுடன் காட்சியளிக்கும் பழூர் விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில்!!
திருச்சி மாநகரிலிருந்து ஜீயபுரம் செல்லும் வழியில் பழூர் விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. காவிரி கரையோரத்தில் அமைத்திருக்கும் இந்த கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள விஸ்வநாத சுவாமி சந்நிதியில் விஸ்வநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கூடவே தெற்கு நோக்கிய சந்நிதியில் விசாலாட்சி அம்பாலும் எழுந்தருளியுள்ளனர்.
இங்குச் சென்று வழிபட்டால் காசிக்குச் சென்றது போலக் காசிக்கு நிகரான பலன் கிடைக்கும் என கூறும் கோவிலின் குருக்கள் கௌரி சங்கர். இந்த கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் விஸ்வநாத சுவாமி மற்றும் விசாலாட்சி அம்பாள் ஆகியோரின் கற்சிற்பங்கள் சோழர்கள் கால சிற்பங்கள் வரலாற்று தகவல்களையும் பகிர்கிறார்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் பாண்டியர்கள் காலத்தில் புதிப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட பின்பே நவக்கிரங்கள் அமைக்கப்பட்டதும், அதற்கு ஆதாரமாக கோவிலைச்சுற்றி பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னமும், நவக்கிரங்கள் தத்தமது மனைவியருடன் அமைந்திருந்துப்பது இந்த கோவிலின் சிறப்பாக பார்க்கப்படுகிறது என கூறுகிறார்.
பரிகார தலமாக பார்க்கப்படும் இந்த கோவிலில் குடும்ப பிரச்சனை, திருமண தடை என பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதாக நம்பப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு விசேஷமாக இருப்பதால் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். பெரும்பாலானோர் ஒன்பது வாரங்கள் அல்லது 48 நாட்கள் தொடர்ந்து விளக்கு போட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் பூஜை மட்டும் நடத்தப்படுகிறது.
கோவில் திறந்திருக்கும் நேரம் - வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை முதல் வெள்ளிகிழமை வரை காலை 7.30 மணியிலிருந்து காலை 9 மணி வரையும், மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரையும் இந்த கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. சனிக்கிழமைகளில் காலை 7.30 மணியிலிருந்து 1 மணி வரையும், மாலை 4.30 மணியிலிருந்து 7.30 மணி வரையும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
எப்படி செல்வது - திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜீயபுரம், முக்கொம்பு, மற்றும் பெட்டவாய்த்தலை வழியாக செல்லும் நகரப்பேருந்துகள் பழூரில் நின்று செல்கின்றன. ஆட்டோ வசதியும் உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision