திருச்சியில் பானிபூரி தயாரிக்கும் குடோனுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி:

திருச்சியில் பானிபூரி தயாரிக்கும் குடோனுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி:

திருச்சி மேல தேவதானம் பகுதியில் வட மாநிலத்து இளைஞர்கள் பானிபூரி விற்பதற்காக தமிழ்நாட்டை தஞ்சமடைந்துள்ளனர். இந்தநிலையில் சுகாதாரமில்லாத பானிபூரி மற்றும் உருளைக்கிழங்கிளான உணவுப் பொருள்களை திருச்சி முழுவதும் உள்ள சாலைகளில் வியாபாரம் செய்வதால் பொதுமக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

பொதுமக்களின் நலனுக்காக சுகாதாரமில்லாத பானிபூரி உணவு வகைகளை சாலையில் வைத்து விற்க கூடாது என்பதற்காக அதனை தயாரிக்கும் இடத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா தலைமையில் குழு அமைத்து திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் வடமாநில இளைஞர்கள் கமல் சிங் ராஜி ஆகிய இளைஞர்கள் மற்றும் 40 இளைஞர்களும் அந்த பகுதியில் குடியிருந்து இதனை தயாரித்து வந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் குழு விரைந்து சென்று ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேலான உணவு பொருட்களை பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா மேலான குழுவினர் பறிமுதல் செய்து மேலும் தயாரிக்கும் இடத்தை மூடி சீல் வைத்தனர்.

மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா நிருபர்களிடம் கூறியதாவது;- திருச்சி மாவட்டத்தில் வாழுகின்ற மக்கள் அனைவரின் உடல் நலம் பாதிக்க கூடாத வகையில் உணவுகளை மக்கள் உண்ண வேண்டும்.இது போல் பாதுகாப்பு இல்லாத முறையில் உணவகம் மற்றும் சாலை கடைகள் நடத்தி வந்தாள் அவர்கள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பான உணவு பாதுகாப்பான முறையில் ஓட்டல் உரிமையாளர்கள் வியாபாரம் செய்ய வேண்டும். என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.