3 மணி நேரம் காத்திருந்து பொங்கல் தொகுப்பு வாங்கிச் சென்ற பொதுமக்கள்

3 மணி நேரம் காத்திருந்து பொங்கல் தொகுப்பு வாங்கிச் சென்ற பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருள்கள் ஆயிரம் ரூபாய் பணம், ஒரு கிலோ அரிசி, சர்க்கரை கரும்பு ஒன்று ஆகிய பொருட்கள் வழங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணியிலிருந்து காத்திருந்த கல்லூக்குடி  நரசிம்மங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் என 100 பேரும்ண நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் அப்போது நியாய விலை கடை எண் கொண்ட 13EP005py நியாய விலை கடையில் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்ய இணையதளம் சரிவர கிடைக்காததால் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொண்ட பொதுமக்கள். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்....கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஸ்கேன் செய்யும் மிஷின் வேலை செய்யாத போனதால் பொதுமக்கள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பொங்கல் தொகுப்பு பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது தாமதமாக வழங்குவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn