திருச்சியில் 6 மாதமாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இல்லாமல் இயங்கும் காவல் நிலையம் - திருடர்களுக்கு குஷி

திருச்சியில் 6 மாதமாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இல்லாமல் இயங்கும் காவல் நிலையம் -  திருடர்களுக்கு குஷி

திருச்சி மாநகரில் 14 காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. திருச்சி ஓலையூர் சாலை பகுதியில் உள்ள பிரேம் நகர், இச்சிகாமாலைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக வீடு மட்டும் கடைகளில் பூட்டு உடைத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

பூட்டிவிட்டு செல்லும் கடை,வீடுகளில் பகலிலேயே பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை திருடர்கள் எடுத்து செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக திருச்சியில் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து சென்னைக்கு பணி மாறுதலான போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் வீட்டில் ஐந்து பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக இப்பகுதிகள் கே.கே.நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்டது. அங்கே புகார் கொடுக்க சென்றால், கடந்த ஆறு மாதமாக காவல் நிலையத்தில்

குற்ற பிரிவிற்கு ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் இல்லாததால் நகை, பொருட்களை பறிகொடுத்தவர்கள் கண்ணீருடன் திரும்பி செல்கின்றனர். திருடு போன பொருட்களுக்கு வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கான ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளரும் இல்லாமல் கே.கே.நகர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் திருட்டுச் சம்பவம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆய்வாளர் வீட்டிலேயே பூட்டை உடைத்து திருடிய சம்பவத்திற்கு அவருக்கே வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 6க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கவனத்தில் கொண்டு கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு குற்ற பிரிவிற்கு நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களை பணியமர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision