திருச்சியில் 2.04 ஏக்கர் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்

திருச்சியில் 2.04 ஏக்கர் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்
திருச்சி புங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் தெரஸ்நாதன் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை சேர்ந்த டாக்டர் கேந்திரநாத் என்பவரிடமிருந்து நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் 2.04 ஏக்கர் நிலத்தை ஒத்திக்கு வாங்கியுள்ளார். இந்த சொத்தின் மீது ஜார்ஜுக்கு உள்ள உரிமையை மறைத்து வண்ணாங்கோயிலைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் மகாமுனியிடம் நிலத்தை கேந்திரநாத் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாருக்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் ரமேஷ் தரப்பினருக்கும் ஜார்ஜ் தரப்பினருக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, ரமேஷ் மற்றும் மகாமுனியின் ஆதரவாளர்கள் முகமூடி அணிந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஜார்ஜ் தெரஸ்நாதன் தரப்பினரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அருளானந்தம்ராஜ், ராபின், ஆனந்த், பொன் ராமன், பாஸ்கர் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் ராம்ஜி நகர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவா்களை வெட்டிய கூலிப்படையினா் தற்போது தப்பி சென்றதால், காவல்துறையினா் அவா்களை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். தொடர்ந்து இது குறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் பிரச்சினையில் தற்போது கூலிப்படையினர் தலையிட்டு அருவாள், பாட்டில்களில், தாக்குதல் நடத்தியதில் எதிர்தரப்பினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, உரிய நேரத்தில் காவல்துறை சென்று இருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO