புனித வனத்து அந்தோணியார், புனித செபஸ்தியார் கோவிலில் பொங்கல் விழா

புனித வனத்து அந்தோணியார், புனித செபஸ்தியார் கோவிலில் பொங்கல் விழா

திருச்சி மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் அமைந்துள்ள புனித வனத்து அந்தோணியார் தேவாலயத்தில் பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு கடந்த  மணப்பாறை மறைவட்ட அதிபர் ம.தாமஸ் ஞானதுரை, உதவி பங்குத்தந்தை ஜா.இன்பென்ட் ராஜா ஆகியோரால் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.

புனித வனத்து அந்தோணியார் திருவுருவ கொடியேற்றம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் இரவு அந்தோணியார் மன்றாட்டு, செபமாலை வழிபாடு, ஊர் பொங்கல் வழிபாடும் நடைபெற்றது. 

அன்று இரவு புனித வனத்து அந்தோணியாரின் ரதபவனியும் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து  தண்ணீர் குடம் அழைப்பு, கால்நடைகளுக்கு புனிதர்களின் தீர்த்தம் தெளித்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து, பெரியவர்கள், சிறியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் இரவு புனித செபஸ்தியார் மன்றாட்டு, செபமாலை வழிபாடு, ஊர் பொங்கல் வழிபாடு, இரவு புனித செபஸ்தியார் ரதபவனியும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து திருவிழாவின் நிறைவுநாளான வியாழக்கிழமை பிற்பகலில் தாரைதப்படைகள் முழங்க வானவேடிக்கையுடன் புனிதர்களின் பகல் தேர்பவனி தேவாலயத்திலிருந்து புறப்பட்டது. இதில் உயிர்த்த ஆண்டவர், அந்தோணியார், செபஸ்தியார், ஆரோக்கியமாதா, குழந்தை ஏசு, லூர்து மாதா, வேளாண்கன்னி மாதா, சந்தியாகப்பர் உள்ளிட்ட புனிதர்கள் மின் அலங்கார தேர்களின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டனர். ஊர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் பவனி மீண்டும் தேவாலயத்தில் நிறைபெற்றது. வருகின்ற 23-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியிறக்கம் நடைபெறும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn