திருச்சியில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பொன்மலை ரயில்வே பணிமனை:
திருச்சி பொன்மலை பகுதியில் இரயில் பெட்டிகளையும், ரயில் என்ஜின் களையும் பழுதுபார்க்கும், ரயில்வே பணிமனை அமைந்துள்ளது.இப்பணிமனைக்கு ஒவ்வொரு நாளும் பராமரிப்புத் தேவைக்காக பத்துக்கும் மேற்பட்ட சரக்கு இரயில்கள், என்ஜின்கள் வந்துச்செல்வது வாடிக்கை. இதற்காக பொன்மலை ரயில் நிலையத்திலிருந்து, பொன்மலை ரயில்வே பணிமனைக்கு பிரத்தியோகமாக தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன. அந்த ரயில்வே தண்டவாளங்களை தினமும் பராமரிக்கும் பணியில் இரயில்வே ஊழியர்களின் ஈடுபடுவார்கள்.
சமீப காலமாக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும் , காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும் , தண்டவாள பராமரிப்பு பணிகள் தடைபட்டுள்ளது.கடந்த ஒருசில மாதங்களாக, அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக, தண்டவாளங்களுக்கு மத்தியில், செடி, கொடிகளும், முட்புதர்களும் மண்டி கிடக்கின்றன.இதனை கடந்து இரயிலினை இயக்குவது ஓட்டுபவர்களுக்கு சவாலாக இருக்கிறது.தண்டவாளத்தில் இருந்து இரயில் கீழே இறங்கி விபத்துக்குள்ளாகும் என்ற அச்சத்தோடும் , மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், பாதை தெரியாமல் காடுகளுக்குள் பயணிப்பதாகவும் இருப்பதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையின் எதிரே, ரயில்வே பணிமனை காண கணக்கியல் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அதற்குள் நேற்று இரவு ஏழு அடி நீளமுள்ள பாம்பு உள்ளே புகுந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், ஏழு அடி நீளமுள்ள பாம்பை லாபகமாக பிடித்து, பாதுகாப்பாக வெளியே எடுத்துச் சென்றனர்.