கோழி வளர்ப்பு பயிற்சி

கோழி வளர்ப்பு பயிற்சி

கரூர் மாவட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், புழுதேரியில் ஒரு நாள் சான்றிதழுடன் கூடிய கோழி வளர்ப்பு - புறக்கடை நாட்டுக்கோழி குறித்த பயிற்சியானது எதிர்வரும் புதன்கிழமை டிசம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணி அளவில்
(07.12 2022) ஒரு நாள் சான்றிதழ் கூடிய கட்டண பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சியில் கோழி இனங்கள், மேம்படுத்தப்பட்ட கோழிகளில் : தீவனம் மற்றும் கொட்டில் மேலாண்மை முறைகள், நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, அலங்காரம், புறக்கடை கோழிகளின் பொதுவான மேலாண்மை முறைகள், மேம்படுத்தப்பட்ட கோழிகளை சந்தைப்படுத்துதல் மற்றும் பொருளாதார கணக்கீடு குறித்து பயிற்சி அளிக்கப்படும். 

எனவே ஆர்வமுள்ள ஊரக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, தேநீர், சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ. 250/- செலுத்த வேண்டும். இப்பயிற்சிக்கு முன் பதிவு அவசியம். மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள - கைபேசி எண் 6381150356.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO