சாலைக்கு பால் ஊற்றி போராட்டம்

சாலைக்கு பால் ஊற்றி போராட்டம்

திருச்சி மாநகராட்சியின், 41வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் - நவல்பட்டு சாலை மற்றும் தெரு சாலைகளில் பல ஆண்டு காலமாக பாதாள சாக்கடை பணி என்ற பெயரில் மெத்தனமாய் பணி செய்யும் L&T ஒப்பந்த நிர்வாகத்தையும், கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து உடனடியாக சாலையை செப்பனிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சாலையில் பால் ஊற்றும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு பகுதி செயலாளர் சந்தோஷ், மாவட்ட துணை செயலாளர் நிவேதா ஆகியோர் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் பா.லெனின், மாவட்ட செயலாளர் சேதுபதி, பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் யுவராஜ் ஆகியோர் உரையாற்றினார். நிர்வாகிகள் அபிராமி, சுபாஷ், தினேஷ், சசி, மது, மஞ்சு, சத்யா, திவ்யா உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர். போராட்டத்தின் போது பறிக்கப்பட்ட சாலையின் நடுவே பாலை ஊற்றி கண்டன கோஷம் எழுப்பி போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தை ஒட்டி மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் வந்து 20 தினங்களுக்குள் பாதாள சாக்கடை பணியை நவல்பட்டு சாலையில் முடித்து தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision