மஹிந்திரா நிறுவனம் நடத்திய இணையவழி போட்டியில் திருச்சி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பரிசு

மஹிந்திரா நிறுவனம் நடத்திய இணையவழி போட்டியில் திருச்சி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பரிசு

மஹிந்திரா இந்தியா நிறுவனம் பொறியியல் துறை மாணவர்களின் தொழில்நுட்ப திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து மஹிந்திரா நிறுவனம் விதித்துள்ள வடிவமைப்பு கட்டமைப்பு விதிகளை பின்பற்றி ஒரு வாகனத்தை உருவாக்க வேண்டும். E-BajaSeaindia 2021 என்ற பெயரில் நடத்தப்படும் போட்டிக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து தங்களுடைய வாகனத்தினுடைய அமைப்பு விதிமுறைகள் எல்லாவற்றையும் மூன்று அல்லது நான்கு மென்பொருட்கள்  ஆய்வு செய்த பின்பே அதனுடைய திட்டங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தையும்   அறிக்கையாக தயார் செய்து  முதலில் சமர்ப்பித்தல் வேண்டும். 

பொறியியல் துறை மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இது போன்ற போட்டிகள் உதவுகின்றன. இந்த போட்டியில் திருச்சி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியை சேர்ந்த 22 மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து பங்காற்றியுள்ளனர். 

இதுகுறித்து கல்லூரி மாணவர்களின் ஒருங்கிகணைப்பாளர்    ரமேஷ் கூறியதாவது.... the virtual run என்ற பெயரில் உருவாக்கப்பட்ட வண்டி  எவ்வாறு ஓடுதளத்தில் பயணிக்கிறது என்பதை ஒரு வீடியோவாக தயார் செய்து அனுப்பிய பிறகு அதனைக் மஹிந்திரா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஒரு வண்டியை எவ்வாறு வடிவமைத்து வாகனத்தை உருவாக்குவதில் முதலில் பின்பற்ற வேண்டியது தொழில்நுட்பம் சார்ந்த நுட்ப செயல்கள் அனைத்தையும் சரியான முறையில் மாணவர்கள் திட்டமிட்டு  அதனை செயல்படுத்துதல்  மிக அவசியமான ஒன்றாகும். மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்வது போன்று இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய Ipg carmakers மென்பொருள் கொண்டு மாணவர்கள்  வடிவமைத்த வண்டியை  அவர்கள் தயாரித்துள்ள மென்பொருளில் பொருத்திப்பார்த்து அதன் இயக்கத்தை நிறுவனம் கொடுத்த அத்தனை வடிவமைப்பு திட்டங்களையும் சரியாக மாணவர்கள் பயன்படுத்தியுள்ளனரா என்பதையும்  எவ்வாறு வடிவமைத்துள்ளனர், எத்தனை நுட்பமான விஷயங்கள் சரியாக கையாளப்பட்டிருக்கிறது என அனைத்தையும் அவர்கள் கண்காணித்து இதற்கான பரிசுகளை வழங்குவர். தயாரித்துள்ள வாகனங்கள் மேடு பள்ளங்களில் கூட எவ்வாறு இயங்குகிறது என்பதே மிக முக்கியமானது. திருச்சி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் Sales business presentation 2021 என்ற பிரிவில் மூன்றாவது பரிசு பெற்றுள்ளனர். 

இப்பரிசுக்கு மிக முக்கிய காரணமாக அவர்கள் வைத்துள்ள வரையரையானது  தயாரித்துள்ள வாகனத்தை எவ்வாறு மக்களிடம் வணிகரீதியாக கொண்டு சேர்க்க வேண்டும் அது எவ்வாறு மக்களுக்கு பயன்படும் விதமாக இருக்கிறது என்பதை குழுவினருக்கு விளக்குவதன் மூலம் நடுவர்கள் பரிசினை தேர்வு செய்து வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பிரிவுக்கும் உண்டான பரிசுகளை தற்போது வழங்கப்பட்டுள்ளது அதாவது சிறந்த வடிவமைப்பு சிறந்த திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப பயன்பாடு என்ற பிரிவின்கீழ் பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மிகச் சிறந்த படைப்பிற்கான பரிசுகள்  இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF