திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் வாசிப்பு விழிப்புணர்வு நாள் கொண்டாட்டம்
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை அனைத்து முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான 6 நாள் இணைப்பு பாடநெறி வகுப்பை 20.7.2022 முதல் 27.07.2022 வரை ஏற்பாடு செய்துள்ளது.
இணைப்பு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஹோலிகிராஸ் கல்லூரியின் புத்தக விமர்சன சங்கம் இணைந்து 25.7.2022 இன்று வாசிப்பு விழிப்புணர்வு தினத்தை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் கொண்டாடியது.
2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை பாடத்திட்டத்தில் சேர்ந்த 1650 முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்லூரியின் செயலாளர் அருட்சகோ ஆன்னி சேவியர்,தனது வாழ்த்துரையில் வாசிப்பு தனிநபர்களின் தொடர்புகளை மேம்படுத்தி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என்பதை வலியுறுத்தினார்.முதல்வர்
அருட்சகோ கிறிஸ்டினா பிரிட்ஜெட் வாசிப்பு மாணவர்களின் படைப்பாற்றலை விரிவுபடுத்தி அவர்களை ஒரு முழுமையான ஆளுமையாக மாற்றுகிறது என்னும் கருத்தை வலியுறுத்தினார்.
ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பேர் வீதம் 50 மாணவர்கள் வாசிப்பின் நன்மைகள் குறித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் கேத்தரின் எட்வர்ட் தனது உரையில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார் ஆங்கிலத்தில் பேசுவதற்கும் புத்தகத்தில் இருந்து சில வரிகளை தினமும் படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் கல்லூரியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நூறு வாசிப்பு மேற்கோள்கள் கல்லூரி வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டன மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நம்பிக்கையூட்டும் குறிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது பிரிட்ஜ் கோர்ஸ் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் மரியா கமிலா நோபல் எஸ்தர் தீர்க்க லட்சுமி மற்றும் புத்தக விமர்சன கழக பொறுப்பாளர் முனைவர் ரோஸி லிடியா ஆகியோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO