'பிரியாவிடை பெற்றார்' ப்ரியா கல்யாணராமன்
சிக்கல் சண்முகநாதர் கோவிலுக்கு எதிர்வீடுதானே தவிர பழகுபவர்களுக்கு எந்தவித சிக்கலை ஏற்படுத்தாதவர் ப்ரியா கல்யாணராமன் இயற்பெயர் ராமச்சந்திரன் என்பதாலேயோ என்னவோ புன்னகை முகமாகவே காட்சியளிப்பார், நேற்று இரவு வரை இனிக்க இனிக்க பேசிக்கொண்டிருந்த குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் இன்று நம்முடன் இல்லை....
குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய வந்த மூத்த பத்திரிகையாளர். அனைவருடனும் அன்பாக எளிமையாக பழகக்கூடிய தமிழ் இதழியல் உலகில் நீண்ட அனுவபம் கொண்ட பிரியா கல்யாணராமன் எழுத்துலகிலும் பெரும் சாதனைகள் படைத்தவர்.
ஒரே காலகட்டத்தில் 4-5 தொடர்கள் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர். இதழை இளமை பொங்க வழிநடத்தியதில் ஆசிரியர் பிரியா கல்யாணராமனின் பங்கு மகத்தானது. “மனுஷனுக்கு எக்கச்சக்கமான பிரச்னைகள். ரிலாக்ஸ் பண்ணத்தான் பெரும்பான்மையான மக்கள் புக்ஸ் படிக்கிறாங்க. நாட்டுல ஆயிரம் பிரச்னைகள்னு சொல்லி அவங்களை நாமளும் போட்டுப் பிழியக்கூடாது. அதனால்தான் குமுதத்தில் ஜனரஞ்சகமான விஷயங்களை அதிகம் சேர்க்கிறோம்” என்பார்.
அதேநேரம் அத்தியாவசிய பிரச்னைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதிலும் அவர் தீவிரமானவர். குமுதம் இதழைப் புரட்டினால் சினிமா தொடங்கி சிரிப்பு வரையிலான பல விஷயங்களோடு மிக முக்கிய கட்டுரைகளையும் பார்க்கலாம். அதுதான் பிரியாவின் பத்திரிகை பாணி.
சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே ஊசி போடுகிற மருத்துவர் போல.
ப்ரியா கல்யாணராமனைப்பற்றி சிலாகிக்கிறார் கத்துக்குட்டி திரைப்பட இயக்குநர் இரா. சரவணன் பக்கத்துக்குப் பக்கம் குமுதம் இதழை ஃபுல் மீல்ஸ் சாப்பாடு போல் ரெடி செய்தவர். “ஒருமுறை மு.க.அழகிரியை பேட்டி எடுத்துத் தர முடியுமா எனக் கேட்டார் சார். வெகு நாட்களாக அழகிரி அப்போது ஊடகங்களைத் தவிர்த்த நேரம். ஆனாலும், காரசாரமான பேட்டியை எழுதிக் கொடுத்தேன். ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை அழகிரி அந்த பேட்டியில் சொல்லி இருந்ததால், நிச்சயம் பிரியா கல்யாணராமன் பாராட்டுவார் என நினைத்தேன்.
ஆனால், ‘என்னதான் இருந்தாலும் அவங்க அண்ணன் தம்பி. ஏதோ கோபத்தில் அவர் பேசிட்டார். அதை அப்படியே நாம பிரிண்ட் செய்தால் இருவரையும் வாழ்நாளுக்குப் பிரித்ததுபோல் ஆகிவிடும். அது பத்திரிகை தர்மமாக எனக்குத் தோன்றவில்லை’ என்றார் பிரியா சார். ‘என்ன பேட்டி இது... சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒன்றுமே இல்லையே’ எனச் சொல்லுகிற பத்திரிகை ஆசிரியர்கள்தான் அதிகம். ஆனால், நம் பரபரப்புக்காக யார் வாழ்க்கையிலும் விளையாடக் கூடாது எனச் சொன்ன ஒரே பத்திரிகை ஆசிரியர் பிரியா கல்யாணராமன் தான்” என்கிறார் இரா. சரவணன். இதழியல் துறையில் எண்ணிலடங்காதவர்களை உருவாக்கியவர். பல துறை நுட்பங்களை அழகியலோடும் எழுதும் ஆற்றல் மிக்கவர் சார் என்றார்.
தலைமைச்செயலாளர் இறையன்பு அவர்கள் தன்னுடைய சிந்தனைகளை சிறு கவிதைகள் போல தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்னுடைய நண்பர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகாலமாக தினமும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களில் ஒருவர் எழுந்தாளர் ஜே.வைத்தியநாதன் அதனை அவர் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு அனுப்பி வைக்கிறார் பாதிபேருக்கு காலை பொழுதே அந்த சிந்தனைகளில்தான் விடிகிறது. அவரை கடந்த வாரம் தொடர்புகொண்ட ப்ரியா கல்யாண ராமன் இறையன்பு சார் இந்த பிஸியான நேரத்திலும் எழுதுவது மிக்க சந்தோஷமாக இருக்கிறது அவரது சிந்தனைகளை தொகுத்து நாம் நமது இதழ்களில் பயன்படுத்த விரும்புகிறோம் அது வாசகர்களை சென்றடையும் எனக்கூறி இருக்கிறார்.
அது குறித்து ஜே.வி.என்னும் தலைமைச்செயலாளரிடம் பேச நான் தற்பொழுது ஹிமாச்சல்பிரதேஷில் இருக்கிறேன் வந்தபின் அது குறித்து பேசலாம் எனக்கூறி இருக்கிறார் ஆனால் கடைசிவரை சந்திக்கவே முடியவில்லை ப்ரியா கல்யாணராமன் பேசியது அவர் குரலின் இனைமையை உங்களுக்கு புரியவைப்பதற்காக....
ரசனையான எழுத்துக்களின் பேனா முள் உடைந்தது...சாரி சாரி கீ போர்ட் காலத்தை காலன் பறித்துக்கொண்டான்.