தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தபால் வாக்குபதிவு
பாராளுமன்ற தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலர்களுக்காக தபால் வாக்குகள் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இன்று (15.04.2024) 829 நபர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில் வேட்பாளர்கள் / முகவர்கள் முன்னிலையில் தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில் இம்மையத்தில் வாக்குச்சாவடி மையம் போன்றே வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர்கள் வாக்குப்பதிவு செய்பவர்கள் விரலில் அழியா மை வைத்து அதன்பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதனடிப்படையில் (12.04.2024) அன்று திருச்சிராப்பள்ளி மாநகர காவலர்கள் மற்றும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலர்கள் என 1743 நபர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். (13.04.2024) அன்று நடைபெற்ற தபால் வாக்குப்பதிவில் 1545 நபர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று (15.04.2024) மாநகர காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் புறநகர் காவலர்கள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலர்கள் என 829 நபர்கள் இம்மையத்தில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான பெட்டியிலும், இதர பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த காவலர்கள் இதர பாராளுமன்ற தொகுதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினார்கள். மேற்குறிப்பிட்ட நாட்களில் அஞ்சல் வாக்கு பெற்று வாக்களிக்க தவறிய மாநகர காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் புறநகர் காவலர்கள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கு மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பாக நாளை (16.04.2024) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision