மணப்பாறை அருகே அடுத்தடுத்த இரு வீடுகளில் வீட்டின் பூட்டை திறந்து 11 சவரன் நகை மற்றும் ரொக்கம் கொள்ளை

மணப்பாறை அருகே அடுத்தடுத்த இரு வீடுகளில் வீட்டின் பூட்டை திறந்து 11 சவரன் நகை மற்றும் ரொக்கம் கொள்ளை

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடுத்தடுத்த இரு வீடுகளில் வீட்டின் பூட்டை திறந்து புதன்கிழமை 11 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மணப்பாறை அடுத்த போடுவார்பட்டியில் வசித்து வருபவர் சிவக்குமார்(40). இவர் மதுரை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மொண்டிப்பட்டி காகித ஆலை ஒப்பந்த பணியாளரான சிவக்குமார் மனைவி தமிழ்செல்வி(33) புதன்கிழமை காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீடு திறந்து கிடப்பதாக உறவினர்கள் அளித்த தகவலின்பேரில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் அருகே தான் மறைத்து வைத்திருந்த சாவியை கொண்டு வீடு திறந்திருப்பதும், பீரோ திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 11 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதேபோல் தமிழ்செல்வி வீட்டின் அருகே வசித்து வரும் அங்கன்வாடி சமையலர் ப்ரியா(30) வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீடும் சாவிக்கொண்டு திறக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அங்கிருந்த 2 கிராம் நகை மட்டும் காணவில்லையாம். பட்டப்பகலில் நடந்துள்ள இக்கொள்ளை சம்பவங்கள் குறித்து புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார், மோப்ப் நாய் ஸ்பார்க் மற்றும் கைரேகை நிபுணர்கள் நிகழ்விடத்திற்கு வரவழைத்தனர். தடயங்கள் சேகரிக்கப்பட்டு புகாரின்பேரில் மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn