எஸ்.ஆர்.எம் டி.ஆர்.பி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

எஸ். ஆர்.எம் டி.ஆர்.பி பொறியியல் கல்லூரியில் (10.05.2025)அன்று ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவானது மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்போடு காலை 10:30 மணி அளவில் தொடங்கியது. என் விஷன் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் விராலிமலை செயல் தலைவர் திரு. ராஜமோகன் வீரையன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
எஸ்.ஆர்.எம் டி.ஆர்.பி பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். சிவக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினர்களையும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்றார்.முதல்வர் அவர்கள் இந்த ஆண்டின் கல்வியாண்டின் 2024 -2025 கல்லூரியின் சாதனைகள் மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட நிறுவனத்தின் வெற்றிகளை எடுத்து வைத்து ஆண்டு அறிக்கையை வழங்கினார்.
சென்னை ராமாபுரம் மற்றும் திருச்சி எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தில் தலைமை இயக்குனர் ஆகிய முனைவர் என்.சேதுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் முயற்சி மற்றும் கடுமையான பயிற்சிகளில் மூலம் வெற்றியின் படிக்கட்டுகளை விரைவில் எட்டும் படி ஊக்கமளித்து உரை வழங்கினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய சிறப்பு விருந்தினர் அவர்கள் தற்போதைய சூழலில் களப்பணி ஆற்றி வரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு அனைவருக்கும் வணக்கம் செலுத்த வைத்து சிறப்பு செய்தார். மாணவர்கள் தன்னுடைய முயற்சியில் ஒரு பொழுதும் தளர்ந்து விடக்கூடாது என்றும் AI தொழில்நுட்பத்தோடு கற்றலின் கண்டுபிடிப்புகள் இயங்க வேண்டும் என்றும் ஆளுமை திறனின் இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் உரை வழங்கினார்.
தொடர்ந்து கல்வி விளையாட்டு மற்றும் ஏனைய கற்றல் செயல்பாடுகள் உயர் மதிப்பையும் சாதனையும் படைத்த 250க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
2000 மேற்பட்டோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் அவர்கள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி உறை வழங்கினார். விழா இனிதே நிறைவுற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision