திருச்சியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ மாரடைப்பால் மரணம்!

திருச்சியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ மாரடைப்பால் மரணம்!

திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவியாளராக இருப்பவர் சேகர் (56). இவர் நேற்று மாலை சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ரோந்து வாகனத்தில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

Advertisement

அங்கிருந்த காவல்துறையினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.