கொள்ளிடம் ஆற்றில் 2வது நாளாக தேடுதலில் சிறுவன் உடல் மீட்பு - மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் பட்டர்குலாம் என்ற வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி வேதம் பயின்று வருகின்றனர். இந்த பாடசாலையை ஆடிட்டர் பத்ரி நாராயணன் பட்டர் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வேத பாடசாலையில் பயின்று வரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஸ்ரீதரின் மகன் விஷ்ணு பிரசாத் (13), சம்பத் என்பவரின் மகன் ஹரிபிரசாத் (14), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (12), ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சேஷாத்திரி மகன் சூரிய அபிராம் (13) ஆகிய நான்கு மாணவர்கள் ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் கோபாலகிருஷ்ணன் ஆழமான பகுதிகள் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் தத்தளித்தார். இதைக் கண்ட அந்தப் பகுதியினர் அவரை உயிருடன் வீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் மற்ற மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள் 25 பேர் ஆற்றில் இறங்கி மூன்று மாணவர்களின் தேடும் பணிகள் ஈடுபட்டனர். மேலும் ரப்பர் படகு மூலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேடினர். இதில் விஷ்ணு பிரசாத் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரண்டு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடும் பணிகளில் ஈடுபட்டனர். இரவு ஏழு மணி வரை தேடியும் இரண்டு மாணவன் கிடைக்காததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு மாணவர்களை இன்று (15.05.2023) காலை முதல் மீண்டும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கொள்ளிடம் கரையோரம் உள்ள முற்பகரில் சிக்கியிருந்த ஹரி பிரசாத் என்ற சிறுவனுடன் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன சூர்யா அபிராம் என்ற சிறுவனின் உடல் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்பு பணிகளை பார்வையிட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆண்டி மீட்பு பணிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn