தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சர் - திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் பேட்டி
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்த அவர்.... தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி உள்ளது என்று சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது நான் பேசி உள்ளேன்.
விழுப்புரத்தில் கள்ள சாராயம் குடித்தும் செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்தும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுள்ளது. திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதால் இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நடைபெறுகிறது.
தமிழக டிஜிபி கஞ்சா விற்பனை தடுக்க 2.0, 4.0 என்று ஓப்போவதை மட்டும் தான் செய்கிறார். காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு காரணமாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
அவர் பதவியேற்ற நாளிலிருந்து தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா, கள்ள சாராயம் விற்பனை என்று அமோகமாக நடைபெற்று வருகிறது. மரக்காணத்தில் கள்ள சாராயம் விற்பனை நடைபெறுவதாக பத்திரிகையில் வந்த செய்திகளை அரசு கண்டுகொள்ளவில்லை.
இதற்கு முழு பொறுப்பேற்று தமிழகத்தை ஆளும் ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn