திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா
திமுக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகரச் செயலாளர் மு. மதிவாணன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலை அனைவருக்கும் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து அரங்கேறிய பாரம்பரிய கலை மற்றும் மூக்குத்தி முருகன் இன்னிசை நிகழ்ச்சிகளை கண்டு களித்து மகளிருக்கு புது பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்களை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், மாநகர அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் மணிமாறன், பாரதிதாசன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நகர கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision