புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 உணவு வணிகங்களுக்கு சீல்
திருச்சிராப்பள்ளியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்த குற்றத்திற்காக உயர்திரு.லால்வேனா IAS ஆணையர் உணவு பாதுகாப்பு துறை சென்னை மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் திருச்சிராப்பள்ளி ஆகியோரது உத்தரவு மற்றும் பரிந்துரையின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் டாக்டர்.R.ரமேஷ்பாபு அவர்களால் அவரச தடையாணை அறிவிப்பின் மூலமாக நான்கு கடைகள் நேற்று சீல் செய்யப்பட்டது.
SLS மளிகை, தோகைமலை ரோடு, அதவத்தூர், திருச்சி,
சரவணா மளிகை, இனாம்புளியூர், வியாழன்மேடு, திருச்சி 3.G.E.லெட்சுமி டீ கடை, பெரிய ஆஸ்பத்திரி ரோடு, திருச்சி,ஸ்ரீராம் ஸ்டோர், சண்முகா நகர், உய்யக்கொண்டான்மலை, திருச்சி ஆகிய உணவு வணிகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காவல்துறை GH காவல்நிலைய உதவி ஆய்வாளர் புகழேந்தி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், வடிவேல், ஸ்டாலின், வசந்தன், சண்முகசுந்தரம், ஜஸ்டின், பாண்டி, ரெங்கநாதன், பொன்ராஜ் மற்றும் அன்புச்செல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனிருந்தனர்.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO