திருச்சி மாநகரில் இரண்டு கடைகளுக்கு சீல்

திருச்சி மாநகரில் இரண்டு கடைகளுக்கு சீல்

திருச்சி - திண்டுக்கல் மெயின் ரோடு, கருமண்டபம் பகுதியில் சக்தி டீ ஸ்டால் மற்றும் திருச்சி, திண்டுக்கல் மெயின் ரோடு, கருமண்டபம் பகுதியில் உள்ள அம்மன் பீடா ஸ்டால் ஆகிய கடைகளில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை ஆணையர் லால்வேனா அவசர தடையாணை உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் மேற்கண்ட இரண்டு கடைகள் சீல் செய்யப்பட்டது.

திருச்சி, திண்டுக்கல் மெயின் ரோடு, கருமண்டபம் பகுதியில் சக்தி டீ ஸ்டாலில் (07.09.2022) மற்றும் (01.12.2022) ஆகிய தேதிகளிலும், திருச்சி, திண்டுக்கல் மெயின் ரோடு, கருமண்டபம் பகுதியில் உள்ள அம்மன் பீடா ஸ்டாலில் (06.12.2022)-ம் தேதியில் ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு அரசுகணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு உணவுபாதுகாப்பு ஆணையர் R.லால்வேனா அவசர தடையாணை உத்தரவின் அடிப்படையில் மேற்கண்ட இரண்டு கடைகளும் சீல் செய்யப்பட்டது. மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்.... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்தநிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தார்.

இது போன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவுபொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். உணவு கலப்பட புகாருக்கு: 99 44 95 95 95 / 95 85 95 95 95. மாநில புகார் எண் : 94 44 04 23 22

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO