திருச்சியில் கோவிட்டால் இறந்தவருக்கு இரண்டாவது கோவிட் தடுப்பூசி - அதிர்ச்சியில் குடும்பத்தினர்

திருச்சியில் கோவிட்டால் இறந்தவருக்கு  இரண்டாவது கோவிட் தடுப்பூசி - அதிர்ச்சியில் குடும்பத்தினர்

திருச்சி உறையூர் பெஸ்கி தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ் .இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி கோவிட் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டார்.தடுப்பு செலுத்தி கொண்டே நான்கு நாட்களிலேயே இவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. கோவிட் தொற்று ஏற்பட்டவுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை பலனின்றி 15.05.2021 அன்று உயிரிழந்தார்.

தற்பொழுது இன்று செல்வராஜ் இரண்டாவது கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவருடைய மகன் இவர் கைபேசியை வைத்துள்ளார். அதற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.அதில் தந்தைக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக விபரங்களுடன் இருந்ததை பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த தன்னுடைய தந்தைக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி சான்றிதழ்யை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ந்து உள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனை ஆய்வாளர்களின் தனியார் மருத்துவமனை வளாகத்திலும் இவருக்கு கோவில் தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான ஆவணமும் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிவராசு  விசாரணையை துவக்கியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision