பகல் பத்து ஏழாம் நாள் உற்சவம் - நம்பெருமாள் ரத்தின கிரீடம், ரத்தின அபயஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவத்தின் 7ம் திருநாள் இன்று நம்பெருமாள் ரத்தின கிரீடம் அணிந்து, திரு மார்பில் சிவப்புக்கல் சூரிய பதக்கம், பஞ்சாயுத ஹாரம்,
ரத்தின அபயஹஸ்தம், அடுக்குபதக்கம், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், பவளமாலை, பின்புறம் புஜகீர்த்தி, அண்டபேரண்ட பக்ஷி பதக்கம் அணிந்து தங்கபல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, அர்ச்சுன மண்டபத்தில் அரையர்கள் முன்னிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
கோவில் பிரகாரம் எங்கிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision