மெல்லிசை மேடை கலைஞர்கள் தேர்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

மெல்லிசை மேடை கலைஞர்கள் தேர்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் மெல்லிசை மேடை கலைஞர்கள் தேர்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தனியார் அரங்கில் நடைபெற்றது. 

தமிழக அரசு கலை பண்பாட்டுதுறை, மெல்லிசை மேடைகலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதில்லை, 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெல்லிசை மேடைகலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

15 வருடங்களாக தமிழக அரசிடம் வாரியம் அமைப்பதற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனுக்கள்வழங்கியும், எந்த முதலமைச்சரும் எங்கள் துயரத்தை துடைக்க முன்வரவில்லை, தற்போதுள்ள முதலமைச்சர் உடனடியாக மெல்லிசை மேடை கலைஞர்களுக்காண வாரியம் அமைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றவேண்டும் என மிகவும் வேதனையோடு தெரிவித்தனர்.

மண்சார்ந்த இசைக்கலைஞர்களுக்கு கலைசுடர்மணி விருது, கலைநன்மணி விருது, கலைவளர்மணி விருது, கலைமாமணி விருது வழங்குவது போல் மெல்லிசை கலைஞர்களுக்கும் விருதுவழங்கி கௌரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision