மீண்டும் இடம் மாறுகிறது சிவாஜி சிலை

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா , துணை ஆணையர் க. பாலு ஆகியோர் முன்னிலையில் இன்று 06.05.2025 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி. துர்கா தேவி, திருமதி. விஜயலட்சுமி கண்ணன், திருமதி.பி.ஜெயநிர்மலா ,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
திருச்சி மாநகராட்சியில் மாமன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது.மேயர் அன்பழகன் பேசியபோது முக்கியமாக திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட சிவாஜி முழு உருவ சிலை அகற்றி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கு எதிரே வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 8 ,9 ம் தேதிகளில் திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அப்பொழுது அவர் திறந்து வைப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே பிரபாத் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட பொழுது அந்த சிலையை திறப்பதற்கு கோர்ட்டில் தடையாணை வாங்கப்பட்டது. 2009ல் அப்போதைய போக்குவரத்துறை அமைச்சர் நேரு சிவாஜி சிலை வைக்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் திறக்க முடியவில்லை.
தற்பொழுது அந்த சிலை சோனா மீனா திரையரங்கு எதிரே வைக்கப்பட்ட பொழுது அது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீண்டும் அரசு புறம்போக்கு இடத்தில் வைக்க கூடாது என்று தெரிவித்து விட்டனர் .இதையடுத்து திருச்சி வயலூர் ரோட்டில் (அரசு மருத்துவமனை)புத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிவாஜி சிலை நிறுவுவதற்கு ஒருவர் இடத்தை தானமாக கொடுத்துள்ளார். அங்கே சிலை வைக்கப்படும் அதற்காக இன்று சிறப்பு தீர்மானம்மாமன்ற கூட்டத்தில்நிறைவேற்றப்படுகிறது என மேயர் அன்பழகன் குறிப்பிட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision