மதிமுகவின் 32 ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு இலட்சிய கொடி அணிவகுப்பு ஊர்வலம்

மதிமுகவின் 32 ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு இலட்சிய கொடி அணிவகுப்பு ஊர்வலம்

மதிமுக வின் 32-ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் இலட்சியக் கொடி ஏந்திய அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையில் இருந்து கையில் கட்சிக்கொடி ஏந்தி தப்பாட்டத்துடன் தொடங்கிய ஊர்வலமானது ராஜவீதி,

 வாகைக்குளம் சாலை, விராலிமலை சாலை, கோவில்பட்டி சாலை, திருச்சி சாலை, புதுத் தெரு, பேருந்து நிலையம் வழியாக தந்தை பெரியார் சிலை அருகே ஊர்வலம் நிறைவடைந்தது. பின்னர் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற

 கூட்டத்தில் மதிமுகவின் கடந்தகால வரலாறு, சந்தித்த சோதனைகள், சாதித்த சாதனைகள் குறித்தும் விளக்கி பேசினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision