பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் - மனுக்கள் மீது துரிதமாக தீர்வு
திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப., அவர்கள், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி, இன்று (06.3.2024)-ந் தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 26 மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு கான அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட "மக்களுடன் முதல்வர்” முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 432 மனுக்கள் பெறப்பட்டு, 290 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதம் உள்ள 142 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 11 பழைய மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த 373 மனுக்களில் 128 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும், மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இம்முகாமில், காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision