ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

முதல்முறையாக அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது. பெரு விவசாயிக்கு மட்டுமே சொந்தமாக இருந்த டெக்னாலஜியை சிறு விவசாயிக்கும் கொண்டு சென்றுள்ளது உழவன் செயலி. 

எலமனூரைச் சார்ந்த சிறு விவசாயி நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது. ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் இரண்டு ஏக்கருக்கான செலவு மொத்தம் 2500 ரூபாய் இதுவே சாதாரணமாக செய்திருந்தால் 3900 ரூபாய் ஆயிருக்கும் ஆக மொத்தம் சிறு விவசாயிக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் ஒரு ஏக்கருக்கு 700 ரூபாய் சேமிப்பாகிறது.

பொதுவாக ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது என்பது பெரு விவசாயிகளால் மட்டுமே செய்ய முடியும். அதாவது பணக்காரங்கால் மட்டுமே செய்ய முடியும் அதற்காக ஆகும் செலவு 5,000 முதல் 10 ஆயிரம் , 10 15 20 ஏக்கர் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் வரை எனக் கூறப்பட்டு வந்திருந்தது. ஆனால் தமிழக அரசின் உதவி உழவன் செயலி மூலம் எலமனூரைச் சார்ந்த இரண்டு ஏக்கர் வைத்துள்ள சிறு விவசாய, ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. 

பெரு விவசாயிக்கு மட்டுமே சொந்தமாக இருந்த டெக்னாலஜியை சிறு விவசாயிக்கும் கொண்டு சென்றுள்ளது உழவன் செயலி. உழவன் செயலி பணக்காரகளிடம் இருந்து லேட்டஸ்ட் டெக்னாலஜியை ஏழைகளுக்கும் கொண்டு செல்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision