திருச்சியில் கருணாநிதிக்கு மிக உயரமான சிலை - அமைச்சர் பேச்சு

திருச்சியில் கருணாநிதிக்கு மிக உயரமான சிலை - அமைச்சர் பேச்சு

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இக்கோட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை வகித்து சிறப்பு உரையாற்றினார். 

இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசுகையில்..... திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உழைத்துக் கொண்டிருந்தபோது இத்தொகுதியை தோழமைக் கட்சிக்கு கொடுப்பது என தலைமை முடிவெடுத்தது திமுக தலைமையின் உத்தரவை ஏற்று மனம் நோகாமல் முகம் சுளிக்காமல் தொடர்ந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக பாடுபட்டு சிறப்பாக செயலாற்றிய கழகத் தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலும் நமது தோழர்கள் எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து கடுமையாகவும், சிறப்பாகவும் பாடுபட்டார்கள். நாங்கள் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறோம். என்றைக்கும் நீங்கள் சொல்கின்ற பணிகளை தட்டாமல் செய்பவனாக நான் இருப்பேன். அது போல சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நமது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இருப்பார்கள்.

தலைவர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழாவை நாம் சீருடன் சிறப்போடும் கொண்டாட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 42 ஊராட்சிகள், 2000 கிராமங்கள் உள்ளன. அனைத்து பகுதிகளும் தலைவர் கருணாநிதி உருவப்படத்தை வைத்து அவருக்கு மரியாதை செலுத்தி கழகத் தொண்டர்கள் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அதேபோல மாநகரத்திலும் வட்டச் செயலாளர்கள் தலைவர் கருணாநிதியின் 16வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

தலைவர் கருணாநிதி 40 ஆண்டு காலம் செய்த பணியை நமது தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற மூன்றாண்டு காலத்தில் செய்து முடித்துள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். மிக உயரமான கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ய இக்கூட்டத்தின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் நமது கழகத்திற்கு ஒரு மரியாதை தேடி தந்திருக்கிறார்கள் அவர்களை உருவாக்கிய தலைவர் கருணாநிதிக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டியது நம்முடைய கடமை. எனவே இந்த பிறந்தநாள் விழாவை நாம் சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்று முதன்மை செயலாளர் நேரு தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision