ஸ்ரீ மகா கால பைரவநாத சுவாமி ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கலியுகத்துக்கு கால பைரவர் என்றொரு சொல் உண்டு. காலபைரவ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். முன்னோர் ஆராதனை கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு அஷ்டமியும் பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். குறிப்பாக, தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி நாளில், பைரவரை வழிபடுவது இன்னும் நற்பலன்களை வாரி வழங்கக் கூடியது. அதன்படி தேய்பிறை அஷ்டமியான நேற்று (24.10.2024) திருச்சி குண்டூர், மல்லிகை நகரில் பைரவருக்கான தனி ஸ்தலமான ஸ்ரீ மகா காலபைரவநாத சுவாமி ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வாராகி அம்மன் மற்றும் காலபைரவருக்கு பால், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரலான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தேய்பிறை அஷ்டமியில் காலபைரவ பெருமானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision